கத்தார் ஏர்வேஸ் இந்தியாவின் 11 நகரங்களுக்கு விமான சேவைகளை தொடங்கியது..!

Qatar Airways to operate flights to 11 Indian cities for limited period
Pic: Twitter/Qatar Airways

இந்தியா, கத்தார் இரு நாடுகளுக்கும் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், தற்போது சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கத்தார் நாட்டின் விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ், செப்டம்பர் 6 முதல் அக்டோபர் 24 வரை கத்தார் தலைநகர் தோஹாவிற்கும், இந்தியாவின் சில நகரங்களுக்கும் இடையே சிறப்பு விமானங்களை இயக்குவதாக அறிவித்திருந்தது.

இதையும் படிங்க: இந்தியா, கத்தார் இடையே சிறப்பு விமான சேவைகள் மேலும் இரண்டு மாதங்கள் நீட்டிப்பு..!

இந்நிலையில், செப்டம்பர் 6ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் கத்தார் ஏர்வேஸ் விமானங்களில், இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பயணிக்க விரும்பும் பயணிகள்,

ஒரு வழி பயணத்தையோ அல்லது இருவழிப் பயணத்தையோ தேர்வு செய்து விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மூலம் இயக்கப்படும் இந்த சிறப்பு விமானங்கள், இந்தியாவின் சென்னை, அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூர், கொச்சி, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, கோழிக்கோடு, மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு செல்லவிருக்கின்றன.

மேலும், இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் கூறுகையில், உங்கள் பயணம் முழுவதும், சுகாதாரத்தின் மிக உயர்ந்த தரங்களையும், சமீபத்திய பாதுகாப்பு நடவடிக்கைகளையும், பயணத்தின் போதோ அல்லது எங்கள் அதிநவீன ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலோ எதிர்பார்க்கலாம் என்றும், பயணிப்பதற்கு முன்னர் அனைத்து பயணிகளும் தாங்கள் செல்லக்கூடிய நாட்டின் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம் என்றும் கூறியுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் அமீர் சூடான் நாட்டிற்கு அவசர நிவாரண உதவிகள் அனுப்ப உத்தரவு..!!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

கத்தார் தூதருடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சந்திப்பு..!

Editor

கத்தார் ஏர்வேஸ், ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள்.!

Editor

கொரோனா அப்டேட் (ஜூன் 18): கத்தாரில் புதிதாக 1,267 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 4 பேர் பலி.!

Editor