கத்தார் அமீர் அவர்களின் 2021 புத்தாண்டு வாழ்த்து செய்தி.!

Qatar Amir Newyear message
Pic: Qatar Day

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று (01-01-2021) புத்தாண்டை முன்னிட்டு, மக்களிடம் புத்தாண்டு தின வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டார்.

கத்தார் அமீர் அவர்கள் புத்தாண்டு தின வாழ்த்து செய்தியில், நாங்கள் 2021ம் ஆண்டை வரவேற்கிறோம், இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம் என்றார்.

புத்தாண்டு வாழ்த்துக்களைத் பரிமாறிக்கொண்ட கத்தார் அமீர்.!

மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் சவால்களிலிருந்து மீண்டு வருவோம் என நாங்கள் நம்புகிறோம். இந்த புத்தாண்டில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், கத்தார் மக்களுக்கும் மற்றும் அனைத்துலக மக்களுக்கும் இந்த ஆண்டு அமைதியான மற்றும் நல்ல ஆண்டாக மாற எனது வாழ்த்துக்கள் என ட்விட்டரில் அமீர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கத்தார் அமீர் அவர்கள் புத்தாண்டை முன்னிட்டு, பல நட்பு நாடுகளின் தலைவர்களுடன் புத்தாண்டு வாழ்த்துக்களைத் பரிமாறிக்கொண்டார்.

ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலைகளை அதிகரித்து கத்தார் பெட்ரோலியம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…