கத்தார் அமீர், ஓமான் சுல்தானிடம் தொலைபேசி உரையாடல்.!

Qatar Amir Telephone conversation
Pics: Qatar Day / ONA

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (07-12-2020) திங்கள்கிழமை ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.

இந்த தொலைபேசி உரையாடலில், இரு சகோதர நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான வழிகள் குறித்தும், பல்வேறு துறைகளில் அவற்றை மேம்படுத்துவது குறித்தும் மதிப்பாய்வு செய்தனர்.

கத்தார் அமீர், குவைத் அமீருடன் தொலைபேசி உரையாடல்.!

இதேபோல், கத்தார் அமீர் அவர்கள் குவைத் அமீர் HH ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்களுடன் நேற்று தொலைபேசி மூலம் உரையாடினார்.

இந்த உரையாடலில், வளைகுடா ஒற்றுமையை நிலைநிறுத்த குவைத் அரசு மேற்கொண்ட மதிப்புமிக்க முயற்சிகளுக்கு குவைத் அமீருக்கு நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு தொழிலாளர்களின் தாகத்தை தணிக்கும் கத்தார் தன்னார்வ அமைப்பு.! 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…