கத்தாரில் திறந்தவெளி பணியிடங்களில் வேலை செய்வதற்கான கோடைக்கால வேலை நேரம் நிறைவு.!

Qatar Labour Ministry announces end of summer working hours in workplaces
Photo: Shutterstock

கத்தார் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் கோடைக்காலத்தில் திறந்தவெளி பணியிடங்களில் வேலை செய்வதற்கான வேலை நேரம் ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைமுறையில் இருக்கும்.

காலை 11:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை நிறுத்தப்பட வேண்டும் எனவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், அமைச்சகம் கோடைக்காலத்தில் திறந்தவெளி பணியிடங்களில் வேலை செய்வதற்கான வேலை நேரத்தை கடந்த ஆகஸட் 31ம் தேதி முதல் முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் MOPH குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல் வெளியீடு.!

மேலும், தொழிலாளர்கள் வெப்ப அழுத்தத்திற்கு ஆட்படுவதிலிருந்து தவிர்க்க, அவர்களின் தொழில் வசதிக்காக குளிரூட்டப்பட்ட (A/c) பகுதிகள் வழங்கப்படுகிறது.

மூலமும், குளிர்ந்த குடிநீர் மற்றும் லேசான ஆடைகளை வழங்குவதன் மூலமும், வெவ்வேறு நேரங்களில் இடைவெளிகளை கொடுப்பதன் மூலமும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை தொடருமாறு அமைச்சகம் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கத்தாரில் பல்வேறு இடங்களில் உள்ள பணியிடங்கள் குறித்து அமைச்சகத்தின் ஆய்வாளர்கள் ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 31 வரை ஆய்வு மேற்கொண்டதன் விளைவாக அமைச்சரவை முடிவை மீறிய 263 நிறுவனங்களின் வேலைத்தளங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

  Facebook

 Twitter

 Instagram