கத்தாரில் களைகட்டும் 12வது சர்வதேச Falconry மற்றும் Hunting விழா.!

Qatar Marmi Festival
Pic: @algannas_qa

கத்தாரில் 12வது சர்வதேச Falconry மற்றும் Hunting (Marmi) விழா HE ஷேக் ஜோன் பின் ஹமாத் அல் தானி (Sheikh Joaan bin Hamad al Thani) அவர்கள் ஆதரவின் கீழ், கடந்த (01-01-2021) வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கத்தாரில் 12வது சர்வதேச Falconry மற்றும் Hunting விழா தொடக்கம்.!

கத்தார் Al Gannas சொசைட்டி ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவானது Sealine-ல் உள்ள Sabkat Marmi-ல் நடைபெற்று வருகிறது, இந்த விழாவை ஜனவரி 30, 2021 வரை நடத்த கத்தார் Al Gannas சொசைட்டி ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விழாவானது, கத்தார் கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது மற்றும் இந்த பாரம்பரியத்தை புதிய தலைமுறையினர் இடையே கொண்டு செல்லும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கத்தாரில் COVID-19 தடுப்பூசியை பெற ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்.!

மேலும், இந்த பாரம்பரியம் எதிர்கால சந்ததியினருக்கு சொந்தமானது என்றும், அவர்கள் அதை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும் என 2021ஆம் ஆண்டின் 12வது Marmi விழா அமைப்புக் குழுவின் தலைவரும், கத்தார் Al Gannas சொசைட்டியின் தலைவருமான Al Gannas, Ali bin Khatem Al Mehshadi அவர்கள் தெரிவித்துள்ளார்.