கத்தார், சவுதி அரேபியா எல்லைகள் மூன்று ஆண்டுகளுக்கு பின் திறப்பு.!

Qatar Saudi borders open
Pic: Reuters

கத்தார் மற்றும் சவுதி அரேபியா இடையே நில வழி, வான் வழி மற்றும் கடல் வழி எல்லைகளை போக்குவரத்துக்கு திறக்க ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், நேற்று (04-01-2021) இரவு முதல் எல்லை திறந்திருக்கும் என்று குவைத் வெளியுறவு அமைச்சர் HE ஷேக் Dr. அகமது நாசர் அல் முகமது அல் சபா தெரிவித்துள்ளார்.

கத்தார் மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையே நில வழி, வான் வழி மற்றும் கடல் வழி எல்லைகளை போக்குவரத்துக்கு திறக்க ஒப்புக் கொள்ளப்பட்டது என்றும், நேற்று இரவு முதல் எல்லை திறந்திருக்கும் என்றும், குவைத் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

கத்தாரில் மேலும் 3 சுகாதார மையங்களிலும் COVID-19 தடுப்பூசி போடும் பணி.!

Al-Ula உச்சி மாநாட்டில் கையெழுத்திடுவதற்காக குவைத் அமீர் அவர்கள் கத்தார் அமீர் மற்றும் சவுதி அரேபியா மகுட இளவரசர் ஆகியோருடன் இரண்டு அழைப்புகளை மேற்கொண்டார்.

மேலும், கத்தார் மற்றும் சவுதி அரேபியா இடையேயான முழு எல்லையையும் திறக்க
நேற்று மாலை முதல் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் குவைத் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

சவுதி அரேபியா மற்றும் கத்தார் இடையே கடந்த 3 ஆண்டுகளாக நடந்துவந்த மோதலினால், வளைகுடா பிராந்தியத்தில் நிலவிய நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் முதல் படி இது என்று பைனான்சியல் டைம்ஸ் செய்தி தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலைகளை அதிகரித்து கத்தார் பெட்ரோலியம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…