லெபனானுக்கு கத்தார் அனுப்பிய இரண்டாவது கள மருத்துவமனை திறப்பு.!

Second Qatari field hospital in Beirut inaugurated
Second Qatari field hospital in Beirut inaugurated. Pic: Twitter/QNA

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த (04-08-2020) செவ்வாய்க்கிழமை அன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அவசர மருத்துவ உதவியை அனுப்புமாறு கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் உத்தரவிட்டார்.

கத்தார் லெபனான் நாட்டிற்கு உதவ இரண்டு கள மருத்துவமனைகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படையின் கத்தார் தேடல் மற்றும் மீட்புக் குழு‌வையும் (Lekhwiya) தேவையான உபகரணங்களுடன்‌ கடந்த (05-08-2020) புதன்கிழமை அன்று அனுப்பி வைத்தது.

இதையும் படிங்க: கத்தார் MoPH குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது.!

மேலும், லெபனானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல்வேறு மருத்துவ உதவிகள், நன்கொடைகள், அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றையும் கத்தார் வழங்கி வருகிறது.

இந்நிலையில், பெய்ரூட்டில் உள்ள Geitaoui மருத்துவமனையில் கத்தார் அனுப்பிய இரண்டாவது கள மருத்துவமனை நேற்று (14-08-2020) திறக்கப்பட்டது.

இதையும் படிங்க: லெபனானுக்கு கத்தார் அனுப்பிய முதல் கள மருத்துவமனை திறப்பு.!

இந்த நிகழ்வில், லெபனான் சுகாதார அமைச்சர் HE Dr.ஹமாத் ஹசன்,
லெபனான் கத்தார் தூதர் HE முகமது ஹசன் ஜாபர் அல் ஜாபர், லெபனான் இராணுவத் தளபதி ஜெனரல் Elias Shamia உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், லெபனான் நாட்டிற்கு உதவி மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்கு அந்நாட்டின் சுகாதார அமைச்சர் HE Dr.ஹமாத் ஹசன் கத்தார் நாட்டிற்கு நன்றியைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெய்ரூட் வெடி விபத்து; கத்தார் ஏர்வேஸ் 45 டன் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தது.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Instagram  https://www.instagram.com/qatartms/

? Telegram https://t.me/tamilmicsetqatar