VBM 6ம் கட்டம்: கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் விமானங்களின் பட்டியல் வெளியீடு.!

Vande Bharath Mission phase6 flights From Qatar to India Air India Express announced
Pic: Twitter/India In Qatar

வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்டமாக கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் விமானங்களின் அட்டவணையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இன்று (28-08-2020) வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 30ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமானங்களை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சருடன் இந்திய தூதர் சந்திப்பு..!

கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் இயக்கப்பட உள்ள விமானங்களில், தமிழகத்திற்கு 6 விமானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறு விமானங்கள், செப்டம்பர் 11, 27 ஆகிய தேதிகளில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கும், செப்டம்பர் 5, 13, 21, 29 ஆகிய தேதிகளில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் நான்காம் கட்டமாக என்னென்ன கட்டுப்பாடுகள் தளர்வு.? – முழு விபரம்.!

மேலும், இந்த விமானத்திற்கான டிக்கெட் புக்கிங் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதளத்தை அனுகலாம் என தெரிவித்துள்ளது.

Fly from Doha to India!Bookings open for Vande Bharat Mission: Phase 6 Visit our website for details: www.airindiaexpress.in#VandeBharatMission #VBMphase6 #ExpressUpdate #AirIndiaExpress

Posted by Air India Express on Friday, August 28, 2020

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram