சூடான் வெள்ள பெருக்கு: கத்தார் 46 டன் மருத்துவ மற்றும் நிவராண உதவிகளை அனுப்பி வைத்தது.!!

Qatar sends more aid to Sudan
Pic: QNA

சூடானில் கடந்த ஒரு மாத காலமாக பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சூடானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் விளைவுகளைத் தணிக்க, சூடானுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்புமாறு கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சூடான் வெள்ள பெருக்கு: கத்தார் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது..!

கத்தார் அமீர் அவர்களின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக, சூடான் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தார் அபிவிருத்திக்கான நிதியம், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான நிலைக்குழுவுடன் ஒருங்கிணைந்து, தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகிறது.

இந்நிலையில், கத்தார் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் (Lekhwiya) குழுவுடன், 46 டன் பல்வேறு மருத்துவ மற்றும் நிவாரணப் பொருட்கள் அடங்கிய ஒரு புதிய தொகுதி உதவியை கத்தார் அமிரி விமானப்படை விமானம் மூலம் சூடான் நாட்டிற்கு அனுப்பி வைத்தது. இதன் மூலம் சூடான் நாட்டிற்கு கத்தார் வழங்கிய மொத்த உதவி 88 டன்களாக உள்ளது.

இதையும் படிங்க: கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற கேப்டகன் மாத்திரைகள் பறிமுதல்..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…