தோஹா மெட்ரோ நிலையங்களுக்கு அருகில் 300 பேருந்து நிறுத்தங்கள் தயாரிக்கும் பணி..!

Qatar Rail prepares 300 bus stops near Doha Metro stations
Pic: Qatar Rail

கத்தார் ரயில் (Qatar Rail) தற்போது தோஹா மெட்ரோ நிலையங்களுக்கு அருகில், 300 பேருந்து நிறுத்தங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிறுத்தங்கள், பிரகாசமான சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இவை நிலையங்களுக்கு அடுத்துள்ள பயணிகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் வசதியாக இருக்கும் என்று கத்தார் ரயில் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தோஹா மெட்ரோ பயணிகளுக்கு இலவச WiFi வசதி அறிமுகம்.!

கத்தாரில் COVID-19 கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் திட்டத்தின் நான்காம் கட்டமாக, தோஹா மெட்ரோ  செப்டம்பர் 1ம் தேதி முதல் அதன் சேவைகளை 30 சதவீத திறனுடன் மீண்டும் தொடங்கியது.

மேலும் அதேபோல், மெட்ரோலிங்க் feeder பேருந்துகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 வழித்தடங்களில் அதன் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் 30 சதவீத திறனுடன் கப்பல்களை இயக்க அனுமதி..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook

Twitter

Instagram

Telegram