லெபனான் வெடி விபத்து: கத்தார் தனது இரண்டாவது விமானத்தை அனுப்பியது.!

Image credit: Embassy of the State of Qatar in Lebanon

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அவசர மருத்துவ உதவியை அனுப்புமாறு கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் உத்தரவிட்டார்.

கத்தார் லெபனான் நாட்டிற்கு உதவ இரண்டு கள மருத்துவமனைகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படையின் கத்தார் தேடல் மற்றும் மீட்புக் குழு‌வையும் (Lekhwiya) தேவையான உபகரணங்களுடன்‌ நேற்று முன்தினம் (05-08-2020) அனுப்பி வைத்தது.

இதையும் படிங்க: கத்தார் குடியிருப்பாளர்களுக்கு‌ நற்செய்தி; ஆறு மாதம் கட்டணம் ரத்து.!!

அதன்பிறகு, கத்தார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தேவையான மருத்துவ உதவி மற்றும் பொருட்களுடன் கத்தார் அமிரி விமான படையின் இரண்டாவது விமானத்தையும் அனுப்பியுள்ளது.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar