கத்தார் அமீர் லெபனானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ QAR 50 மில்லியன் நன்கொடை.!

Amir sends condolences Turkey
Pic: Qatar Day

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அவசர மருத்துவ உதவியை அனுப்புமாறு கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் உத்தரவிட்டார்.

கத்தார் லெபனான் நாட்டிற்கு உதவ இரண்டு கள மருத்துவமனைகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படையின் கத்தார் தேடல் மற்றும் மீட்புக் குழு‌வையும் (Lekhwiya) தேவையான உபகரணங்களுடன்‌ கடந்த புதன்கிழமை (05-08-2020) அன்று அனுப்பி வைத்தது.

லெபனானில் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ “Lebanon In Our Hearts” என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் QAR 50 மில்லியன் நன்கொடையை அளித்தார்.

இதையும் படிங்க: லெபனான் வெடி விபத்து: கத்தார் தனது இரண்டாவது விமானத்தை அனுப்பியது.!

மேலும், லெபனான் நாட்டு உடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, “Lebanon In Our Hearts” பிரச்சாரத்தின் கீழ், கத்தார் ரெட் கிரசண்ட் சொசைட்டி (QRCS) கத்தார் அமிரி விமானப்படையின் விமானம் மூலம் அனுப்பிய மருத்துவ உதவிகள் நேற்று லெபனானுக்கு வந்தடைந்தது.

லெபனான் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கத்தார் பல்வேறு விதமான மருத்துவ உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar